இடுகைகள்

காட்டுத்தீக்கு காரணம் என்ன?

படம்
  காட்டுத்தீக்கு காரணம் என்ன? அண்மையில் நீலகிரியில் உள்ள குன்னூர் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது. அதை அணைக்க இந்திய விமானப்படையின் உதவி வழங்கப்பட்டது. மாநில வனத்துறையும் தீயை அணைக்க பாடுபட்டனர். இதற்காக எம்ஐ 17 வி5 என்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. பம்பி பக்கெட் மூலம் பதினாயிரம் லிட்டர் நீர் செலவானது. காட்டில் உள்ள தீயை அணைக்க நிலப்பரப்பு வழியாக வீரர்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் பம்பி பக்கெட் பயன்படுத்தப்படுகிறது. குளம், ஏரியில் இருந்து நீரை எடுத்து வந்து அப்படியே தீ மீது ஊற்றுகிறார்கள். இதற்கென பக்கெட்டில் கீழ்ப்புறம் சிறப்பு வால்வு அமைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் நவம்பர் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை அதிகளவு காட்டுத்தீ சம்பவங்கள் நடக்கிறது. அதிலும் பிப்ரவரி, ஏப்ரல் மே மாதங்களில் காட்டுத்தீ பாதிப்பு அதிகமாக நடைபெற்று வருகிறது.  இந்திய வன ஆய்வுத்துறை, 2019ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுப்படி, 36 சதவீத காட்டுத்தீ சம்பவங்கள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. 4, 6 சதவீதம் என்று ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் மட்டுமே தீவிரமானவையாக உள்ளன என அறிக்கையில் தெரிய வந்துள்ளது.  2015ஆம் ஆண்டு, உல

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி தேடும் இருவர், காடுகளை அழிக்காமல் பொருட்களை தயாரிக்க முயலும் ஆய்வாளர்!

படம்
  reem hajajreh - yael admi இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்குமான பிரச்னை தீராத ஒன்று. இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு உள்ளது. எனவே, சண்டையிட்டால் எப்போதும் அதன் கை ஓங்கி இருக்கும். அதற்காக பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. பலவீனமாக இருந்தாலும் போரிடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. போரைப் பொறுத்தவரை இருதரப்பிலும் இழப்புகள் உண்டு. உயிர்ப்பலி தொடங்கி பொருளாதார பாதிப்புகள் வரை உண்டு. எனவே, இரு தரப்பிலும் அமைதி முயற்சிகளை சிலர் செய்து வருகிறார்கள். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். அவர்களின் பெயர்கள் ரீம் ஹஜாஜ்ரே, யேல் ஆட்மி.  ரீம், வுமன் ஆஃப் சன் என்ற பெண்கள் அமைப்பையும். யேல், வுமன் வேஜ் பீஸ் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து போருக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போராடினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் உண்டு. ஹமாஸ் அமைப்பு, அக்.7 இல்தான் 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றது. இறந்துபோனவர்களில் யேலின் வும் வேஜ் பீஸ் அமைப்பின் துணைத்தலைவர் விவியன் சில்வரும ஒருவர்.  அவர்கள் நாட்ட

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்பள பாகுபாடு

படம்
  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பொருளாதார பாகுபாடு ஆண் ஒரு டாலர் சம்பாதிக்கிறான் என்றால் பெண் எழுபத்தேழு சென்டுகள் சம்பாதிக்கிறாள் என உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் சங்கம், சம்பளத்தில் உள்ள பாகுபாடு என்பதே, ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் என கூறியுள்ளது.  மாதம், வாரம், நாள் என பல்வேறுவிதமாக ஒருவர வேலை செய்து சம்பளம் வாங்கலாம். ஆனால், ஒருவரின் பாலினம் சார்ந்து ஆண் என்பதற்காகவே பாரபட்சமாக பார்த்து பெண்ணுக்கு சம்பளவெட்டு செய்வது நேர்மையான செயல் அல்ல. ஆணும், பெண்ணும் ஒரே விதமாக வேலை செய்தாலும் கூட பெண்களை சற்று இளப்பமாக பார்த்து சம்பளக்குறைவு செய்வது உலகநாடுகளில் இயல்பாக உள்ளது.  ஒரே கல்வித்தகுதி, அனுபவம் இருக்கும் ஆண், பெண்ணுக்கு ஒரேவிதமாக சம்பளத்தை வழங்குவதே நேர்மையான செயல்பாடு. அப்படியில்லாமல் பாகுபாடு காட்டுவது சமூகநீதிக்கு புறம்பானது. 2022ஆம் ஆண்டு ப்யூ நிறுவனம் செய்த ஆராய்ச்சியில் ஆண்கள் சம்பாதிக்கும் ஒரு டாலரில் எண்பது சென்டுகள் பெண்களுக்கு செல்கிறது என அளவிட்டு கூறியுள்ளனர். அதாவது, ஆண்களுக்கு ஒரு டாலர் என்றால் பெண்

அம்மாவைக் கொன்ற அரசியல்வாதியை, போலீஸ்காரர்களை பழிவாங்க முயலும் மகனின் சட்டப்போராட்டம்!

படம்
யூ ஆர் ஆல் சரவுண்டட் கொரிய டிராமா இருபது எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்  நகரில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்படுகிறார். அதை அங்கு வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் பார்த்துவிடுகிறார். காவல்துறை அவரை சாட்சி சொல்ல அழைக்கிறது. ஆனால் அவரை பணக்கார தொழிலதிபர் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டுகிறார். நர்சிற்கு கணவர் இல்லை. ஒரே ஆளாக நின்று வேலை பார்த்து மகனை வளர்க்கிறார். மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என போலீஸ் அதிகாரி சியோ பான் சியோக் உறுதிதருகிறார்.  இதனால் அந்த நர்சம்மாவும் சாட்சி சொல்ல ஒத்துக்கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவர் வீட்டில் கொலையாகி கிடக்கிறார். கொலையாளி விட்டுச்சென்ற டாலர் ஒன்றைப் பற்றி நர்சின் மகன் தகவல் சொல்கிறான். ஆனால் அவனையும் கொலையாளி கொல்ல முயல்கிறான். அந்த நேரத்தில் கொலையாளி போனில் பேசும்போது, சியோ என்ற உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்த அதிகாரியின் பெயரைக் கூறுகிறான். இதைக்கேட்ட சிறுவன், நம்பிய அதிகாரியே மோசம் செய்துவிட்டதாக நொந்துபோகிறான். இவர்களை பழிவாங்குவது என முடிவெடுத்து அந்த நகரில்

டிக்டாக்கை பொது எதிரியாக கட்டமைக்கும் அமெரிக்கா!

படம்
  மேற்குலக நாடுகளுக்கு வேற்றுகிரகவாசிகள் என்றுமே எதிரியாகவே இருக்கமுடியும். ஏன் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு பயம் கொள்கிறார்களா என்ன? முதலில் ரஷ்யாவை நினைத்து பீதியடைந்தவர்கள், திரைப்படம், பாடல், டிவிநிகழ்ச்சி, செய்தி என அனைத்திலும் அதற்கு எதிரான கருத்துகளை உருவாக்கினார்கள். இந்த ஆண்டுகூட உக்ரைனில் எடுக்கப்பட்ட ரஷ்ய எதிர்ப்பு ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது. அதேசமயம், வெள்ளையர்கள் செவ்விந்தியர்களை கொன்ற உண்மையைப் பேசும் ஸ்கார்சி படத்திற்கு ஒற்றை விருது கூட வழங்கப்படவில்லை. இப்போது சில ஆண்டுகளாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சீனாவை பலவீனப்படுத்த வழி தேடுகிறார்கள். அந்நாட்டு நிறுவனங்களை முடக்கி வருகிறார்கள். அதற்கு தேசப்பாதுகாப்பு என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறுகிறார்கள்.  டிக்டாக் ஆப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பதினைந்து நொடி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்ற ஆப். தற்போது, இசை, நூல் வாசிப்பு என வளர்ந்து வருகிறது. இதில் வீடியோ போட்டு சம்பாதிப்பவர்கள் உலகம் எல்லாம் உண்டு. இந்த நிறுவனத்தில் நாற்பது சதவீத பங்குகளை பைட் டான்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பூர்விகம் சீனா.

எல்ஐசி முகவரின் ஆன்மிகத்தேடல் பயணம் - வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்

படம்
  வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்  கிழக்கு பதிப்பகம்  நாவல்  சந்தானம் என்ற எல்ஐசி ஏஜெண்ட், திருவண்ணாமலையில் கணபதி என்பவரைச் சந்திக்கிறார். அதன் வழியாக வேதமூர்த்தி என்ற சாமியாரைப் பற்றி அறிவதோடு அவரது சீடர்களையும் சென்று சந்திக்க செல்கிறார். இதன் வழியாக அவர் பெறும் அனுபவங்கள்தான் கதை.  ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத ஒரு சம்பவம், அவர்களது சாதாரண வாழ்க்கையை அசாதாரணமாக்குகிறது. மாதச்சம்பள வேலைக்குப் போகவேண்டும் என நினைத்த பால்பாண்டி, சிலம்பம் கற்றுக்கொடுப்பவராக மாறுகிறார். கண்பார்வை இல்லாத ஹரி, குருவின் தீட்சை பெற்று அடுத்த குருவாக மாறுகிறார். இறந்துபோன அம்மாவின் நினைவில் இருந்து மீளாத வைரவன், நகரத்தார் விடுதிக்கு பொறுப்பாளராகிறார். மடத்தின் விடுதியில் வளர்ந்த கோவர்த்தனம் பத்து ஆண்டுகள் அலைந்து திரிந்தபிறகு, ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். மகன் அகாலமாக இறந்துபோக, தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து அதன் வழியாக துக்கத்திலிருந்து மீள முயல்கிறார் கட்டுமானக் கலைஞர் சிவராமன். ஒட்டுமொத்த குடும்பமே தற்கொலை செய்து இறக்க, மடத்தில் துறவியாகி வாழ்கி

தேர்தல், அரசியலில் தலையிடாமல் தள்ளி நிற்க முயலும் டெக் நிறுவனங்கள்!

படம்
  கீழ்த்தரமாக பேசுவது அரசியலில் இயல்பாக இருக்கிறது. அதை இன்னும் புதிய உயரங்களுக்கு காவிக்கட்சி ஆட்கள் கொண்டு சென்று வருகிறார்கள். எதிராளி பேசும் விதமாக அதற்கு நிகராக அதை விட கீழ்த்தரமாக பேச நிறைய ஆட்கள் தயாராகி வருகிறார்கள். தனிநபர்கள் பேசுவது வேறு. அதையே டெக் நிறுவனங்கள், இணையத்தில் பதிலாக அளிப்பது வேறு. குறிப்பிட்ட கட்சி சார்ந்து தவறான பதில்களை அல்லது அவர்களுக்கு பிடிக்காதது போல நேர்மையாக பதில் சொன்னால் கூட தொழில் செய்யமுடியாது.  இந்த விதிகளை யாரும் மீறமுடியாது. மீறினால் உடனே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேசியபாதுகாப்பு, உளவுத்துறை என பல்வேறு அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கு, அலுவலகங்களுக்கு வந்து சோதனையிடுவார்கள். பிறகு தேர்தல் பத்திரங்களில் காசு கொடுத்தால் மட்டுமே தொழில் பிழைக்கும். இல்லையெனில் லஞ்ச, ஊழல் வழக்கு பதிவாகும். தேசதுரோகி என பிழைப்புவாத ஊடகங்கள் அலறுவார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. இப்படி மிரட்டி பணம் பிடுங்குவதில் காவிக்கட்சி அதிகாரத்தில் இருப்பதால் கெட்டிக்காரத்தனம் காட்டுகிறது.  கூகுள், அரசியல் கருத்துகளைக் கூறுவது தொடர்பான பிரச்னையில், எந்த கருத்தும் கூறுவ

மரபணு தடுத்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியும்!

படம்
  இயற்கையாகவே சிலருக்கு உடல் பழனி படிக்கட்டு போல கட்டாக இருக்கும். திருமணமானபிறகு, செல்வச்செழிப்பில் பூரித்தால் உடல் சற்று பூசினாற்போல மாறி குனுக் மினுக் என மாறுவார்கள். ஆனால் சிலர் வெளியேற்றம் நாவலில் வரும் குற்றாலிங்கம் போல வேளைக்கு இருபத்தைந்து இட்லிகளை உள்ளே இறக்கினாலும் உடலில் வேறுபாடே தெரியாது. பரம ரோகியாக இருந்தாலும்கூட யோகி போல வெளியே தெரிவார்கள். அத்தனைக்கும் காரணம் என்ன? மரபணுக்கள்தான்.  சிலருக்கு அடிப்படையான உடற்பயிற்சி செய்து நாற்றம் பிடித்த சோயா சங்சை ஊறவைத்து தின்றாலே உடல், கீரை சாப்பிட்ட பாப்பாய் போல கட்டாக அமைந்துவிடும். ஆனால் இன்னும் சிலர் என்னென்னமோ உடற்பயிற்சி செய்தாலும் கூட உடலில் சுண்டைக்காய் அளவு மாறுதல் மட்டுமே தெரியும். இதற்கெல்லாம் காரணம் நாம் செய்த வினை அம்புட்டு பலமாக இருக்குதோ என நினைத்து கவலை கொள்ள வேண்டியதில்லை. மரபணு காரணமாக சில பிரச்னைகள் வந்தாலும் கூட நம்மால் முடிந்த பிரயத்தனங்களை செய்தால் போதும் உடல் எடை குறைவதோடு உடல் கட்டமைப்பும் பலம் பெறும்.  சோத்துக்கு பஞ்சமில்லாதவர்கள்தான் உடற்பயிற்சி பற்றி யோசிக்கவேண்டும். உடல் எடை என்றாலே அவர் கண்டிப்பாக பசி, பட

பட்டுநூல் மாவீரனின் மறுபிறப்பு பழிவாங்கல் கதை!

படம்
  ஸ்வார்ட் டைனஸ்டி 23 எபிசோடுகள் - மொத்த எபிசோடுகள் 30க்கும் அதிகம சீன டிராமா ராக்குட்டன் விக்கி  பா எனும் வாள் பயிற்சி அகாடமி இருக்கிறது. அதன் தலைவர் ஹெங் என்ற அரசருக்கு போரில் உதவுகிறார். இதனால் அரசர மூன்று ராஜ்யங்களையும் வெற்றி கொள்கிறார். ஆனால் போரின் இறுதியில் வாள் பயிற்சி அகாடமி தலைவரின் பங்களிப்பு காரணமாகவே தான் வெற்றிபெற்றோம் என தாழ்வுணர்ச்சியால் தவிக்கிறார். இதிலிருந்து மீள துரோகம் செய்து வாள் பயிற்சி அகாடமி தலைவரைக் கொல்கிறார். இதில், அவருக்கு அகாடமி தலைவர் காதலியும் உதவுகிறார். இருவரும் சேர்ந்து அவரை விருந்து ஒன்றில் தாக்கி கொல்கிறார்கள். பிறகு அந்த காதலி மன்னரை மணந்துகொள்கிறாள். அந்த துரோகத்தை எதிர்கொள்ள முடியாத வாள்வீரர், தன்னைத்தானே அழித்துக்கொண்டு இறந்துபோகிறார். இது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை.  அகாடமி தலைவரிடம் பயிற்சி செய்த மாணவர்கள் சிலர், அவருக்காக பழிவாங்க காத்திருக்கிறார்கள். அதற்கெனவே உயிரை பத்திரமாக வைத்திருக்கிறார்கள். மற்றும் சிலரோ, ஹெங் அரசில் இணைந்து சுயநலமாக மாறி தங்கள் வாழ்க்கைக்கு என்ன கிடைக்கும் என பார்க்கிறார்கள். நிகழ்காலத்தில், ஹெங் நாட்டில்

சீனாவின் தொன்மைக்காலத்திற்கு சென்று மருத்துவராகி சாதனை புரியும் நவீனகால மருத்துவ மாணவன்!

படம்
  இன்கார்னேடட் லெஜண்டரி சர்ஜன்  சீன காமிக்ஸ்  104 அத்தியாயங்கள்  நவீன உலகில் மருத்துவராக உள்ளவர், தொன்மையான சீனாவின் காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். அதாவது அவரது ஆன்மா செல்கிறது. அங்கு குவா என்ற வாழ்ந்து கெட்ட குடும்ப கடைசிப்பிள்ளையின் உடலில் புகுகிறது.  குவாபு, வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றவர், ஊருக்கு வந்திருப்பார். அந்த நேரத்தில் கொள்ளையர்கள் அங்கு புகுந்து தாக்கி கிராமத்தினரை கொலை செய்து சென்றதில் குவாபு என்ற கடைசிப்பிள்ளையும் நெஞ்சில் வெட்டுபட்டு இறந்துபோயிருப்பார்.  படித்துவிட்டு வந்து அரசு தேர்வு எழுதினால் ஒரு வேலை கிடைக்கும் குவா குடும்பம் வறுமையில் வாடாது என்பதே அவர்களின் ஆசை.  வழி வழியாக அரசு அதிகாரிகளாக வாழ்ந்த குடும்பம், இப்போது வறுமையில் தத்தளிக்கிறது. சாப்பிட சோறே இல்லாத கொடுமை எல்லாம் கிடையாது. உணவில் இறைச்சி வாங்கி சேர்க்க முடியாத வறுமை. குவாபுக்கு இரண்டு அண்ணன்கள். ஒருவர், அரசு தேர்வை எழுதி லஞ்சம் கொடுத்து வேலைக்கு போகமாட்டேன் என உறுதியாக இருக்கிறார். அடுத்தவர், தற்காப்புக் கலை கற்று ராணுவத்தில் சேரவிருக்கிறார். மூன்றாவதாக உள்ள குவாபு, புதிய ஆன்மா காரணமாக மருத்துவ